தமிழக செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் 25-வது கொண்டை ஊசி வளைவில் படுத்திருந்த சிறுத்தை

வாகன வெளிச்சம் முகத்தில் பட்டவுடன் எரிச்சல் அடைந்த சிறுத்தை அங்கிருந்து எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம், கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது கடந்த சில நாட்களாகவே திம்பம் மாலை பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது இரவு நேரங்களில் கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் நடமாடுவதும் தடுப்பு சுவரின் மேல் படுத்திருப்பதும் சாலையை கடந்து செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர் திம்பம் மலைப்பாதை 25வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது சிறுத்தை ஒன்று சாலையோரம் படுத்திருப்பதை கண்டு வாகனத்தை மெதுவாக நிறுத்தினர். பின்னர் சிறுத்தையை தங்களது செல்போனில் படம் எடுத்தனர் வாகன வெளிச்சம் முகத்தில் பட்டவுடன் எரிச்சல் அடைந்த சிறுத்தை அங்கிருந்து எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனவிலங்குகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. திம்பம் மலைப்பாதையில் படுத்து இருந்த சிறுத்தையை சில வாகன ஓட்டுகள் படம் எடுத்துள்ளனர் இது கண்டிக்கத்தக்கது விலங்குகளுக்கு தொந்தரவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்