தமிழக செய்திகள்

அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் அல்ல தூய்மை தேவதைகள்..!- அமைச்சர் ராஜ்மோகன்

உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும்.

தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.

மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அதன் விவரம் வருமாறு:-

அமைச்சர் ராஜ்மோகன் உரை:

தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.

போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது.

பணியின்போது பலியான தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.

உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும்.

வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.

தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.