தமிழ்நாடு மின்துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அப்போது, தமிழகத்தில் நடப்பாண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் நிர்மலர் குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மின்சாரத்துறையில் இந்த ஆண்டு 15000 பேரை பணிக்கு எடுத்தால் அரசுக்கு ரூ.597 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
5000 கேங்மேன் பணிக்கு எடுத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.97 கோடி கூடுதலாக செலவு ஏற்படும்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் போலவே கண்டக்டர்க்கானவ 9 டெண்டர்களில் ரூ.1028 கோடி ஊழல் நடந்துள்ளது.
நீர் மின் மின்சாரம் மூலம் 381 மெகா வாட் மின்சாரம் கொள்முதல். அனல் மின் நிலையம் மூலம் 2,965 மெகா வாட் மின்சாரம் கொள்முதல். கேஸ் மூலம் 149 மெகா வாட் மின்சாரம் கொள்முதல்.
மாநிலங்களுக்கிடையே 4,240 MW மின்சாரம் யூனிட் 5.29 ரூபாய்க்கு கொள்முதல். மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் 13,566 MW மின்சாரம் கொள்முதல்.
மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் யூனிட் - ரூ.5.39க்கு கொள்முதல். சொந்தமாக 5000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.