தமிழக செய்திகள்

‘மாநில அரசு கடன் வாங்குவதில் தவறில்லை’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலத்தின் ஜிடிஎஸ்பியில் மூன்று சதவீதம் அரசு கடன் வாங்கலாம்.

டெல்லியில் இருந்து இரண்டுநாள் அரசுமுறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தமிழ்நாடு வந்தடைந்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“அரசியல் விமர்சனம் சட்டசபையில்தான் செய்யமுடியும். எதிர்க்கட்சியும் பதில் சொல்லட்டும், ஆளுங்கட்சியும் பேசட்டும். காஞ்சிபுரத்திற்கு மருத்துவக் கல்லூரி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசுதான் கேட்கவேண்டும். கல்லூரியுடன் மருத்துவமனையும் அமைத்துக்கொள்ளலாம் என எப்போதோ தெரிவித்துவிட்டோம்.

கடன்தொகை மூலம் அரசு முதலீடு செய்யவேண்டும். அதனால் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும். அதைவிடுத்து நலத்திட்டங்களுக்கு செலவிடக்கூடாது. மாநிலத்தின் ஜிடிஎஸ்பியில் மூன்று சதவீதம் அரசு கடன் வாங்கலாம்.

தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணக்கத்தோடு செயல்படும் என தவெக தெரிவித்துள்ளது. அது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய அனைத்து நிதியும் கொடுக்கப்பட்டது. அதைத்தவிர பெரிய பெரிய திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. கொடுக்கப்பட வேண்டிய அனைத்து நிதியும் கட்டாயமாக கொடுக்கப்படும்.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT