தமிழக செய்திகள்

அரசு ஊழியர்கள் Traditional ஆடை அணிவது குறித்த ஆலோசனையை அரசு கைவிட வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய ஆடை அணிவதை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆ. ராஜ்மோகன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள், மற்றும் அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய ஆடை அணிந்து வர வேண்டும் என்பதே அந்த ஆணை , அதன்படி அஆண் ஊழியர்கள் வேட்டி மற்றும் சட்டை, பெண் ஊழியர்கள் சேலை அணிந்து வர அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது

இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை அணிவது குறித்த தமிழ்நாடு அரசின் ஆலோசனையை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இது குறித்துசிபிஎம் மாநில தலைவர் பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள்தாவது

மரபு ஆடை குறித்த ஆலோசனையை அரசு கைவிட வேண்டும்

தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும்.

இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சர் அவர்களின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT