

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
இதில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது:-
நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது தமிழ் ஆசிரியர் என்னை ரொம்ப அடிப்பார். அப்போது என்னுடன் இருந்த நண்பர்கள் தமிழ் ஆசிரியரிடம் அடி வாங்க முடியாது. பிரெஞ்ச் பிரிவு பாடம் எடுக்கலாம் என்றனர்.
அடித்தாலும், உதைத்தாலும் தமிழ்தான் எனக்கு மூச்சு என்று சொன்னேன். தமிழை முறையாக உச்சரிப்பதில்லை என்று ஆசிரியர் திட்டுவார். எனக்கு தாய் மொழி தமிழ்தான்.
எனவே நீங்கள் அடித்தாலும், உதைத்தாலும் 6-ம் வகுப்பில் தமிழ் தான் படிப்பேன் என்று சொல்லி படித்தேன். தமிழ் நமது தாய்மொழி. அதை நாம் கற்றுக் கொள்வது ரொம்ப சுலபமானது.
தமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் பேசினார். அது மாணவ-மாணவிகளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இந்தமுறை தமிழ்நாடு நாள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது. அடுத்த வருடம் முதலமைச்சர் விஜய் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். நமது தமிழ்மொழிக்கு வயதே இல்லை.
தமிழ்நாடு நாள் என்பது நமது மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் மாநிலத்தின் பெருமையை போற்றும் நாளாகும். தமிழ்நாட்டின் சிறப்புகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நாம் அனைவரின் கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.