தமிழக செய்திகள்

கண்ணியத்துடன் நடந்த இறுதி ஊர்வலம்..!- தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறிய சரத்குமார்

தமிழ்நாடு காவல்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரைப்பட மேதை கே.பாக்யராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும. அவரது இறுதி ஊர்வலகத்தை கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் நடத்த உதவிய தமிழக அரசு, முதலமைச்சர் மற்றும் காவல் தறைக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற "திரைக்கதை மன்னன்" அன்பு நண்பர் கே.பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளையும் அனுமதியையும் வழங்கிய தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பூர்ணிமா பாக்யராஜ்

சாந்தனு பாக்யராஜ் - கீர்த்தி சாந்தனு

சரண்யா பாக்யராஜ்

ரா.சரத்குமார்

ராதிகா சரத்குமார்

பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT