ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி ‘we the leaders' அமைப்பை தொடங்கிய பின் அண்ணாமலை முதல் மாநாட்டை நடத்துகிறார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சில நாட்களில் சமூக வலைதளம் மூலம் நேரலையில் மக்களை சந்தித்து பேசினார்.
அதில், wetheleader.org என்ற இயக்கத்தை தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்தார். இந்த இயக்கத்தை பின்னர் அரசியல் அரசியல் கட்சியாக கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் அறிவிப்பை வெளியிட்ட 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் www.wetheleader.org மூலம் அவரின் இயக்கத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.