தமிழக செய்திகள்

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - முதல்வர் விஜய்

தமிழக இளைஞர்களுக்கு உலக அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவது இலக்கு

சென்னை ஐஐடியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தனர்.பின்னர் சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை (Brain Centre) பார்வையிட்டார்

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டும் விழாவை தொடங்கி வைத்தனர்.இந்த தொடக்க விழாவில் முதல்வர் விஜய் உரையாடினார்.

இந்த அரசு விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது

ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்படுகிறது

மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்தமைக்கு பிரதமருக்கு நன்றியை தெரிவித்தார்.தமிழ்நாடு மக்களின் சார்பாக வரவேற்கிறேன்.தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்படுகிறது.பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்றதன் அடிப்படையில் அரசு செயல்படுகிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது அதன் பலன் மக்களுக்கு நேரடியாக செல்லும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

வேண்டுக்கோள்

மேலும் 1.5 டிரில்லியன் வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிக்கிறது. சென்னையை போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும்..

தமிழக இளைஞர்களுக்கு உலக அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவது இலக்கு. மேலும் 3 ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். அதைப்போல கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஓசூர்- பெங்களூரு இடையேயான மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சென்னை - திருச்சி, திருச்சி- கரூர், கரூர்-கோவை 6 வழிச்சாலையை மேம்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்

என்று தெரிவித்தார்

SCROLL FOR NEXT