மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில் உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கழுத்தின் இடது பக்கம் சாய்வான கயிறு தடம், வலது பக்கம் 3 சிராய்ப்பு காயங்களும், கழுத்தின் வலதுபுறம் ஊசி குத்தியது போன்ற 3 அடை யாளங்களும் இருந்துள்ளன. முதுகு பகுதியில் நீல நிற ரத்தக்கசிவு காயம் இருந்ததாகவும், மூளை 1,400 கிராம் எடையுடன் கூடுதல் வீக்கமாகவும், இதயம் 358 கிராம் வீக்கமாகவும், இடது முழங்கால் மற்றும் இடது கையில் சிராய்ப்பு காயம் இருந்துள்ளது.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை என கொடூர ஆட்சி நடத்துபவர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்