தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துப் பேசினார். அதற்கு முன்னதாக நடந்த பிரம்மாண்ட ரோடு ஷோவிலும் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
பொதுக்கூட்டத்தில் மக்களிடையே அவர் பேசியதாவது
மக்கள் பிரச்னைகளை விவாதிக்கக் கூடிய சட்டமன்றத்தின் மாண்பையும் இந்த முதல்வர் கெடுத்துட்டார்.கண்ட கண்ட சைகைலா காட்டி.. நான் மிசாவில் சந்திச்ச கொடுமைகள் எல்லாம் கிண்டல் பண்ற இடமா சட்டமன்றம்
மக்கள் மாண்புமிகு முதல்வர் என்று கூப்பிடும் அளவிற்கு நடந்துக்கணும்,Chief Minister-ஆ , Cheap Minister-g நடந்துக்காதீங்க என்று தாராபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடையே உரையாற்றினார்.
முதல்வர் என்ற முறையில் அவர் பேசுறதுலாம் இல்லை, கத்துறதுதான்; சட்டமன்றமானாலும் சரி தெருவாக இருந்தாலும் சரி கத்துறதுதான். ஆனால் மீடியா மைக் பார்த்தா மட்டும் அலர்ஜி என்று விமர்சம் செய்துள்ளார்
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இப்படிப்பட்ட நிலை தொடர வேண்டுமா?இந்த ஆட்சியில் 4 மாதங்களில் நாறிப்போய்விட்டது; தவெகவுக்கு வாக்களித்த மக்களே புலம்புகின்றனர்
பல ஊர்களில் ஆளுங்கட்சியினரை மக்கள் அனுமதிக்கவில்லை; இது முதல்வருக்கு எதிரான எதிர்ப்பு.
வாயத்தொறங்க ஸ்டாலின் சார் என்று காட்டு கத்து கத்துறார், நானும் கத்துறேன்.. சிஎம் சார்.ப்ரோ என்ன பயம். இந்தியா முழுசும் பேசிக்கிட்டு இருக்கிற தேர்தல் ஆணையர் விவகாரம் குறித்து நீங்க ஏன் வாயை திறக்குறது இல்லை சிஎம் சார்பிஜேபினா அவ்ளோ பயமா சிஎம் சார்
தவெக ஒரு அரசியல் கட்சியே அல்ல; அது ஒரு கார்ப்பரேட் மாஃபியா.அதில் இன்வெஸ்டிங் பார்ட்னர், வொர்க்கிங் பார்டனர், ஸ்லீப்பிங் பார்டனர், சீக்ரெட் பார்ட்னர் என பெரிய கும்பலே இருக்குஅந்த பார்ட்னர் எல்லாம் யார் என்று உங்களுக்கே தெரியும்; தமிழ்நாட்டை நாசமாக்க வேண்டும் என்பதுதான் அந்த கும்பலின் நோக்கம் என்று விமர்சனம் செய்துள்ளார்.