

அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத்திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.
ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.
எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.
மாற்றம் மாற்றம் என்று சொன்னது என்ன மாற்றம் தெரியுமா?. திமுகவின் ஊழல் லஞ்சத்தில் இருந்து நடந்த மீள்வதற்கான மாற்றம்தான். அந்த வகையில் பெயர் மாற்றமும்தான் நடந்துள்ளது.
மாடல் மாடல் என்று வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்திய ஏமாற்றுப் பெயரை மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று உண்மையானப் பெயர் பெற்றுள்ளது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு.
ஊழல் அரசாக மட்டுமே பெயர் பெற்றிருந்த திமுக-வின் பெயரை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கைகள் வாயிலாக லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற பெயர் வாங்கி இருப்பதால் இதுவும் பெயர் மாற்றம்தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்ந்தால் நல்லது.