தமிழக செய்திகள்

காமராஜருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் கொடுக்கவில்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தங்கம் தென்னரசு விளக்கம்

காமராஜர் மரணமடைந்த செய்தியை கேட்டவுடன் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினார்.

தாரகை கத்பட்

சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தாரகை கத்பட் பேசுகையில், திமுக ஆட்சிக் காலத்தில் காமராஜருக்கு மெரினா கடற்கரையில் உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது:

தங்கம் தென்னரசு

வரலாற்றில் இந்த பேரவையின் பிழையான செய்திகள் பதிவாகி கூடாது என்ற நோக்கத்தோடு விளக்கம் அளிக்கிறேன்.

1975-ம் ஆண்டு காமராஜர் இயற்கை எழுதினார். அவர் மரணமடைந்த செய்தியை கேட்டவுடன் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினார்.

காமராஜர்

இங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரது உடலை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய காமராஜர் இல்லத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். காமராஜர் ஒரு தேசிய தலைவர் அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

ராஜாஜி மண்டபம்

அவரது உடலை ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு வந்து உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டது. கிண்டியில் காந்தி மண்டபத்தில் அருகில் அவருக்கும் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஆக இருந்தவர் இதனை பாராட்டினார்.

ராஜா ராம் நாயுடு

பெருந்தலைவர் காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழவில்லை. அப்பொழுதே உறுப்பினர் ராஜா ராம் நாயுடு மேலவையில் பேசியதை அவையில் மேற்கோள் காட்டி

கலைஞர்

காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அந்த இடத்தை கேட்டார்கள். ஆகையால் கிண்டியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. காமராஜர் சமாதி மேற்கொள்ள அப்போதைய முதலமைச்சர் கலைஞர் இரவெல்லாம் தூங்காமல் அந்த பணியை மேற்கொண்டார் என ராஜாராம் நாயுடு சட்ட மேல் அவையில் பேசியதே சாட்சி. திமுக ஆட்சியில் காமராஜருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.

சபாநாயகர்:-

அந்த காலத்தில் கட்சி மாறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.

காங்கிரஸ் தாரகை கத்பட்:-

நான் பேசியது மெரினாவில் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றுதான், சமாதி மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொண்டார்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.