தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தில் தங்க மோதிரம் திட்டம், மகளிருக்கு ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளானா நேற்று முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலுக்கு வந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமன் தங்க மோதிரத்திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும். இத்திட்டம் நேற்று முதல் அமலானாலும் செப்டம்பர் 15-ந்தேதி முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.