தமிழக செய்திகள்

500 மின்சார பேருந்து கொள்முதல் டெண்டர் ரத்து- தமிழக அரசு அதிரடி

நிதி இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்திற்காக 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கும், அதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் கோரப்பட்ட டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிதி இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.