தமிழக செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செல்வோர் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் தணிந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.