தமிழக செய்திகள்

தமிழக வெற்றிக் கழக கட்சி பேனர் கிழிப்பு- நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு

கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நாளை மறுநாள் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பூர் கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் இருபுறமும் தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். 2 நாட்களில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT