தமிழக செய்திகள்

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும்.

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி 2 தொகுதிகளில் இடைதே்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 6ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ராஜினாமா செய்திருந்தார்.

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தேதிகள்

வரும் செப்டம்பர் 9ம் தேதி அன்று வேட்புமனு தொடக்கம்.

செப்டம்பர் 16ம் தேதி அன்று- வேட்புமனு கடைசி நாள்.

செப்டம்பர் 17ம் தேதி- வேட்புமனு பரிசீலனை

அக்டோபர் 6ம் தேதி- வாக்குப்பதிவு

அக்டோபர் 9ம் தேதி- வாக்கு எண்ணிக்கை

SCROLL FOR NEXT