

மதுராந்தகம் அருகே காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியாகினர்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர் திடீரென வெடித்து சிதறியது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் டயர் வெடித்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.