தமிழக செய்திகள்

தமிழ்நாடு மின்சார விநியோக கழகம்: நடப்பு நிதி ஆண்டில் ரூ.4,060 கோடி லாபம்

2025-26 நிதி யாண்டில் ரூ.4,060 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் நிதிச் சுமைகளால் தவித்துவரும் தமிழ்நாடு மின்சார விநி யோகக் கழகம் (டி.என்.பி.டி.சி.எல்), 2025-26 நிதி யாண்டில் ரூ.4,060 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது

இருமடங்கு லாபம் அதிகம்

அதிகரித்து வரும் நிதிச் சுமைகளால் தவித்துவரும் தமிழ் நாடு மின்சார விநியோகக் கழகம் (டி.என்.பி.டி.சி.எல்), 2025-26 நிதி யாண்டில் ரூ.4,060 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இது, முந்தைய நிதி யாண்டில் ஈட்டிய ரூ.2,073 கோடி லாபத்தை விட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கடன் சுமை

இருப்பினும், லாபத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், நிறுவனத்தின் பெரும் கடன் சுமையைக் குறைக்கப் பெரிதாக உதவவில்லை என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். 2026 மார்ச் 31 நிலவரப் படி, அதன் மொத்தக் கடன்கள் ரூ. 1.07 லட்சம் கோடியைத் தாண்டி யுள்ளது.

நிறுவனத்தின் 2025-26 ம் ஆண்டுக்கான 17-வது ஆண்டு அறிக்கையின்படி, மொத்தக் கடன்கள் ரூ. 1,07,523 கோடியாக இருந்தது. இதில் ரூ. 77,565 கோடி நீண்ட காலக் கடன் களாகும். இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ. 1,01,782 கோடியை விட அதிகமாகும்.

நிறுவனத்தின் நிதிச் செலவுகளும் 2024-25 நிதியாண்டில் ரூ. 10,517 கோடியில் இருந்து 2025-26 நிதியாண்டில் ரூ. 12,770 கோடியாக, 21.4 சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கோடைக்கால மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, டி.என்.பி.டி.சி.எல் பலமுனை கொள் முதல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 2024-25ம் ஆண்டில் ரூ. 1,00,417 கோடி யாக இருந்த நிலையில், தற்போது ரூ.1,02,037 கோடி யாக உள்ளது. இதில், வருமா னத்தின் கிட்டத்தட்ட 32 சத வீதம் அரசாங்க உதவியில் (மானியங்கள் மற்றும் நிதியுதவிகள்) கிடைக்கிறது.

செலவுகள் குறைப்பு

மின்சாரக் கொள்முதல் மிகப்பெரிய செலவினமாகத் தொடர்ந்தபோதிலும், அதன் செலவு ரூ.75,960 கோடியிலிருந்து ரூ.72,348 கோடியாகக் குறைந்தது.

ஊழியர் நலச் செலவுகள் ரூ.8,976 கோடியில் இருந்து ரூ.9,587 கோடியாக அதிக ரித்த நிலையில், தேய்மானம் மற்றும் மதிப்பிழப்புச் செல வுகள் ரூ.2,256 கோடியாக இருந்தன.

நிதிச் செலவுகள் அதிக ரித்தபோதிலும், மின்சாரக் கொள்முதல் செலவினம் குறைக்கப்பட்டதால், நிறுவனத்தின் லாபத்தன்மை மேம்பட்டது. மொத்தச் செலவுகள் ரூ.98,344 கோடியில் இருந்து ரூ. 97,977 கோடியாகச் சிறிதளவு குறைந்தது

தமிழ்நாடு மின் விநியோ கழகத்தின் தணிக்கை அறிக்கையில் கண்டறி யப்பட்டுள்ள முரண்பாடு களால், அதன் நிகர லாபத்தில் ரூ.3,744.39 கோடி வரை குறைவதற்கோ அல்லது இழப்பு ஏற்படுவ தற்கோ வாய்ப்புள்ளதாக தணிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முரண்பாடுகள்

தணிக்கையாளர்கள் கணக்குகளை ஆய்வு செய்த போது, பயன்படுத்தப்படாத உதிரிபாகங்கள், நுகர்வோரி டம் இருந்து வர வேண்டிய நிலுவைத்தொகைக்கான இழப்பீட்டு நிதி ஒதுக்காதது, திட்டப்பணிகளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் இரட்டை வருவாய் வரவுகள் போன்ற பல்வேறு கணக்கி யல் முரண்பாடுகளைக் கண்டறிந்தனர்.

இந்த முரண்பாடுகளைச் சரிசெய்யும்போது, தற்போ தைய லாப மதிப்பில் இருந்து ரூ.3,744.39 கோடி குறையக்கூடும் எனத் தணிக்கையாளர்கள் எச்ச ரித்துள்ளது குறிப்பி டத்தக்கது.

அதிகாரிகள் விளக்கம்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,இந்த தணிக்கை முரண்பாடுகள் குறித்து மின் வாரிய அதிகாரிகள் தரப்பில், தணிக்கையாளர்களுடன் இணைந்து கணக்குகளைச் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், நிகர லாபம் இந்த அளவுக்குப் பெருமளவில் குறையாமல் இருக்கத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT