தமிழக செய்திகள்

தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ் - திமுக விமர்சனம்

மாணிக்கம் தாகூர் "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு என்று திமுக விமர்சனம் செய்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குதவெக (TVK) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கடந்த சில வாரங்களாக புகார்கள் எழுந்திருந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட அதிகாரியின் புகார் இன்றி ஊடகச் செய்திகளின் அடிப்படையில் மட்டும் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெளிவுபடுத்தக் கோரினார்.

மாவட்ட ஆட்சியரின் புகார்

மாவட்ட ஆட்சியர் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறி,இன்று கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வப் புகார் அளித்தார். இதையடுத்து, அதன்படி தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(1) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 294 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு என்று திமுக விமர்சனம் செய்துள்ளது

இது குறித்து திமுக தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர்.

ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா?

தவெகவின் முரட்டு பக்தன்

த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய மாணிக்கம் தாகூர் அவர்கள்தான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர்.

காப்பற்ற பார்த்தது வெட்ககேடு

ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும்.

கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது.

பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்

என்று குறிப்பிட்டுள்ளது

SCROLL FOR NEXT