தமிழக செய்திகள்

விஜய் பதவி ஏற்பு: வீட்டில் இருந்து புறப்பட்டார் திரிஷா

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவி ஏற்கும் நிலையில், திரிஷா வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டு வருகிறார். மற்ற தலைவர்களும் அதிகாரிகளும் நேரு உள்விளையாட்டு அரங்கம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திரிஷா தன் வீட்டில் இருந்து புறப்பட்டார். இவர் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.