தமிழக செய்திகள்

717 டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல்

மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விலைக்கு விற்பனை செய்யும் கடைப் பணியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 11-ந்தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதின் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுவரை 436 கடைகள் மூடல்

அப்போது, இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டம்.

மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்கள் அவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மீள பணியமர்த்த வேண்டும்.

அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும். அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.