மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்று பணி- தமிழக அரசு உத்தரவு

கிடங்கு பணிகளிலும், மாவட்ட அலுவலக பணிகளிலும் அமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்று பணி- தமிழக அரசு உத்தரவு
Published on

தமிழ்நாட்டில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, மாற்று பணி வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட மதுபான கடைகளில் பணியாற்றியவர்களை அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியவர்களை அதிக விற்பனை நடைபெறும் கடைகளை கண்டறிந்து பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கடைகளில் பணியமர்த்தப்படாத மீதமுள்ளவர்களை கிடங்கு பணிகளிலும், மாவட்ட அலுவலக பணிகளிலும் அமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com