தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கான ஆதரவு இந்து ராஷ்டிரம் ஆக்குவதற்கான வழி - எம்பி ரவிக்குமார்

மாநிலங்களுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு விகிதம் பாதுகாக்கப்படும் என்றும் திமுக தெரிவித்துள்ளது

நவம்பர் 30 அன்று தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க திமுக முடிவு செய்துள்ளது. சென்னையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதி மறுவரையறை குறித்து திமுகவின் விளக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய தொகுதிப் பங்கீட்டு விகிதமான 7.18% எந்த வகையிலும் குறையாது என்றும், மாநிலங்களுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு விகிதம் பாதுகாக்கப்படும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கிடையேயான மக்களவைத் தொகுதிப் பங்கீட்டில் உள்ள தற்போதைய நிலையை மேலும் 25 ஆண்டுகளுக்கு தொடர மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் முன்மொழிவு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டுக்கு இழப்பு ஏற்படாது என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது

தலைவர்களின் எதிர்ப்பு

மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்துவது "இந்திய ஜனநாயகத்தின் படுகொலை" என்றும், இது பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குத் தங்களுக்குச் சாதகமாகத் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்க (gerrymandering) வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் ன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தி மட்டுமல்லாது காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிப்பது இந்த மசோதாவிற்கான ஆதரவு, இந்தியாவை ஒரு இந்து தேசமாக மாற்றுவதற்கான ஆதரவாகும் என்று எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

இந்து தேசமாக மாற்றுவதற்கான ஆதரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த வேண்டும் என்ற பாஜக அரசின் விருப்பம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமல்ல, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கும், அரசியலமைப்பையே திருத்துவதற்கும் ஆகும். இந்த மசோதாவிற்கான ஆதரவு, இந்தியாவை ஒரு இந்து தேசமாக மாற்றுவதற்கான ஆதரவாகும்

என்று குறிப்பிட்டுள்ளார்

SCROLL FOR NEXT