சட்டசபை  
தமிழக செய்திகள்

திடீர்ன்னு சாமி வந்துடுச்சு.. சட்டசபையில் ஆவேசமாக துள்ளிய திமுக எம்.எல்.ஏ!

திமுக எம் எல் ஏ குட்டி (எ) சுதாகர் ஆவேசம் அடைந்தார்.

அவையில் இருந்து வெளியேற்றப்படும் திமுக எம்எல்ஏ சாமி ஆடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

வெளியேற்றம்

அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார்.

இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு அமளி செய்தனர்.

இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.

சாமி ஆடிய எம்எல்ஏ

அதன்படி திமுக எம் எல் ஏ க்களை அவைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது வால்பாறை தொகுதி திமுக எம் எல் ஏ குட்டி (எ) சுதாகர் சாமி வந்ததுபோல் ஆவேசம் அடைந்தார்.

சட்ட சபையில் கோஷம் எழுப்பிய படி தரையில் அமர்ந்திருந்த அவர் திடீரென துள்ள ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த சபாநாயகர், அவருக்கு உடல்நிலை சரியில்லை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதை தொடர்ந்து 5 பேர் அவரை பாதுக்காப்பாக பத்திரமாக வெளியேற்றினார்கள்.

அப்போது அவர் தனக்கு திடீரென சாமி வந்து விட்டதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT