Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 செப். 2026

80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 செப். 2026

சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.

சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை

பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.

அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.

நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.

அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.

ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு

பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு

மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு

நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது - எ.வ.வேலு

கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு

முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு

அமைச்சர் நிர்மல்குமார் உரை

விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.

கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது.

திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.

21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்

ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்

எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்

என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்

மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு

அமைச்சர் ஆதவ் உரை

திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.

திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.

ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.

திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்

சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு

சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.

சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்

நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்

சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி

2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்

அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.

சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்

அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.

திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்

சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.

சபாநாயகர் உரை

திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?

சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.

அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.

பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்

அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?

முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.

தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்

கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.

சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.

தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு

சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.

80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்

பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு

சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்

பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்

பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்

சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்

அதிமுக சி.வி.சண்முகம் உரை

நான் கவுண்டர் என கூறுவேன், வன்னியர் குல சத்திரியர் என சான்றிதழில் உள்ளது.

ஒரே சாதி பல்வேறு பிரிவுகளின் பெயரில் இருக்கிறது.

கடலூரில் படையாட்சி எனவும் சென்னையில் நாயக்கர் எனவும் கூறிக்கொள்வர்.

யாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை 1931-ல் சரியாக தீர்மானித்துவிட்டனர்.

சுதந்திரத்திற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு - 4147 சாதிகள் இருந்தன.

2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது - சி.வி.சண்முகம்

நான் சார்ந்த சமூகம் ஓபிசி பட்டியலில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என்று தான் மத்திய அரசு கூறி இருக்கிறது.

சாதிப்பட்டியலை வைத்துக்கொண்டு கணக்கெடுப்பு நடத்தவும். சாதிப்பட்டியலை டவுன்லோடு செய்து மக்களே பார்க்கும் வசதி தேவை - சி.வி.சண்முகம்

அமைச்சர் ஆதவ் உரை

இந்தியாவிலேயே கடந்த 100 வருடங்களாக சமூகநீதிக்கான குரலை எழுப்பும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.

சமூகநீதிக்காக பிரதமர், முதலமைச்சர் பதவியை இழந்தவர்களின் வழியில் தவெக அரசும் தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 370 சாதிகள் உள்ள நிலையில் மத்திய அரசின் பட்டியலில் 290 சாதிகள் மட்டுமே உள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தவெக அரசின் கோரிக்கை

ரூ.12,000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மாநில அரசுக்கு ஏற்றவாறு சாதிப்பெயரின் பட்டியல் தேவை.

சமத்துவமான மரியாதையுடன் வாய்ப்பையும் தருவதுதான் சமூக நீதி - அமைச்சர் ஆதவ்

மக்களிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பட்டியல் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சி.வி.சண்முகம்

உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் ஆகியவை மிக முக்கிய பொது சுகாதார பிரச்சனைகள்.

தமிழ்நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 7 முதல் 8 கிராம் உப்பு உட்கொள்கின்றனர் - அமைச்சர் அருண்ராஜ்

போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது - தவெக எம்எல்ஏ பல்லவி

பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.

மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள் - பல்லவி

வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.

வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் - பல்லவி

போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன் - பல்லவி

என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும்.

சட்டசபையில் முதன்முறையாக பேசிய திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல்லவி பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

* பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

* முதல்வர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தார்.

தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

* சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம்.

* இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம்.

X

Maalai Malar
www.maalaimalar.com