தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம்.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம்

முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் டான்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக டி. மோகன் நியமனம். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங், தொழில் கல்வித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.

சிப்காட் நிர்வாக இயக்குநராக வீர் பிரதாப் சிங், திருச்சி மாநகராட்சி ஆணையராக என். பொன்மணி நியமனம். வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்தரின் சரண்யா நியமனம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம். இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம்.

X

Maalai Malar
www.maalaimalar.com