தமிழக செய்திகள்

கபடி விளையாடிய போது கை முறிந்ததால் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடியாத மாணவன்

மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் புகழேந்தி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஊர் வாலிபர்களுடன் புகழேந்தி நேற்று கபடி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் புகழேந்தியை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் புகழேந்தியின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து, மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தால் புகழேந்தி 10-ம் வகுப்பு கணித தேர்வு எழுத முடியாத சோக நிலை ஏற்பட்டுள்ளது.