தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற மாநில தலைமை தகவல் ஆணையர் குழு

மரியாதை நிமித்தமாகச் முதல்வர சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில தலைமைத் தகவல் ஆணையர் முனைவர் ச. நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்கள் இன்று (நவம்பர் 23, 2026) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சந்திப்பில் பங்கேற்ற ஆணையர்கள்

முதலமைச்சர் உடனான சந்திப்பில் மாநில தலைமைத் தகவல் ஆணையர். முனைவர் ச. நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு). மாநில தகவல் ஆணையர்கள். செல்வி எஸ். மகாலட்சுமி, முனைவர் டி.கே. ஷபீர், திருமதி சி.பி. மீனா மற்றும் திரு. பி. மகாலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பொறுப்பேற்று கொண்ட ஆணையர்கள்

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.புத்திதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணையர்கள் தவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை பதவியில் நீடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT