தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு புதிய தலைவர் மற்றும் நான்கு ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Retired IAS officer S. Natarajan
Published on: 

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகரியான எஸ் . நடராஜனை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மேலும் தகவல் ஆணையத்தில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக எஸ். மகாலட்சுமி,டி. கே. ஷபீர், சி. பி. மீனா,பி. மகாலிங்கம் ஆகியோரை மாநில தகவல் அணையர்களாக நியமித்துள்ளது.

பதவிக்காலம்

முதன்மைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் தங்களது பதவியை ஏற்கும் தேதியிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை இந்த பதவியில் நீடிப்பர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிலவி வந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த புதிய தலைவரும், 4 புதிய ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

X