தமிழக செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுக்கோட்டை முதலிடம், அறிவியலில் 10,476 மாணவர்கள் 100-க்கு 100

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியான தேர்ச்சி விழுக்காடு:-

புதுக்கோட்டை- 97.57%

சிவகங்கை- 97.54%

தஞ்சை- 97.41%

திருச்சி- 97.31%

கன்னியாகுமரி- 97.30%

பாடவாரியான தேர்ச்சி விழுக்காடு

தமிழ்- 98.43%

ஆங்கிலம்- 99.44%

கணக்கு- 97.36%

அறிவியல்- 98%

சமூக அறிவியல் - 97.93%

பாடவாரியாக முழு மதிப்பெண் விவரம்:-

தமிழ்- 34

ஆங்கிலம்- 94

கணக்கு- 3,194

அறிவியல்- 10,476

சமூக அறிவியல்- 3,336

SCROLL FOR NEXT