தமிழக செய்திகள்

சாலையில் பட்டாசு வெடித்த கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

உயிருக்கு ஆபத்தான நிலையில் எஸ்.எஸ்.ஐ. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாலையில் பட்டாசு வெடித்த கும்பலால் தாக்கப்பட்ட காவல் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழந்தார்.

தேனியில் எஸ்.எஸ்.ஐ.யாக பணிபுரிந்த செந்தில் குமார் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது சாலையை மறித்து பட்டாசு வெடித்தவர்களை கண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த பட்டாசு வெடித்தவர்கள் எஸ்.எஸ்.ஐ.-ஐ தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT