தமிழக செய்திகள்

எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து இன்று (புதன்கிழமை) மதியம் 1.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06072) நாளை அதிகாலை 2.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.