சென்னையில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறுகின்றன.
வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத தகுதி உள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய உள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த சிறப்பு முகாம்கள் இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
சென்னையில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறுகின்றன. 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் பதிவு செய்யலாம்.
மாநகராட்சி, தனியார் அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 21 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்யலாம்.