சென்னை:
கலைவாணர் அரங்கில் எம்எல்ஏக்களுக்கான புத்தாக்க பயிற்சியை முதலமைச்சர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:
* ஒரு புது யுகம், மாற்றம் பிறந்திருக்கிறது. செல்லும் இடமெல்லாம் வெல்லும் இடம்தான் என தேர்தல் களத்தில் முதலமைச்சர் நிரூபித்து காட்டியிருக்கிறார்.
* என்னாகுமோ ஏதாகுமோ என கதிகலங்கிக் கிடந்த மக்களுக்கு, புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நிரூபித்தவர் முதலமைச்சர் விஜய்.
* முதலமைச்சர் விஜயை வெல்வார், வீழ்த்துவார் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் இருப்பது விஜய் மாடல் அரசு.
* எப்போதும் இல்லாத வகையில் தற்போதைய சட்டசபையில் இளைஞர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
* இந்த சட்டசபையின் மூலமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சட்டங்களும் இந்தியாவின் பல சட்டசபைகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது.
* இந்தியா வியந்து போற்றி பாராட்டும் பல திட்டங்களை இந்த தமிழகம் தந்திருக்கிறது. அந்த வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர் முதலமைச்சர் விஜய்.
* புதிய எம்எல்ஏக்களின் கன்னி பேச்சில் யாரும் குறுக்கிட மாட்டார்கள். எனது கன்னி பேச்சில் சலசலப்பு ஏற்பட்டபோது யாரும் குறுக்கிடவில்லை.
* சட்டசபை நிகழ்வுகள் ஆட்சி மாற்றத்திற்கு கூட வழிவகுக்கும்.
* தவெக அரசு என்ன செய்யப்போகிறது என நாடே எதிர்பார்க்கிறது.
* சட்டசபை வரலாற்றை நூலகத்திற்கு சென்று படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.