எம்எல்ஏக்களுக்கான புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

சட்டசபையில் உறுப்பினர்கள் என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது போன்ற மரபுகளை அறிந்துகொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
எம்எல்ஏக்களுக்கான புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
Published on

சட்டசபை​யின் முதல் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் வரும் 18-ந்தேதி தொடங்​க உள்​ளது. அதற்கு முன்​ன​தாக எம்​எல்​ஏக்​களுக்கு சட்டசபை நடவடிக்​கைகள் குறித்து 2 நாள் பயிற்சி வழங்​கப்பட உள்​ளது.

இந்நிலையில் கலைவாணர் அரங்கில் எம்எல்ஏக்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி முகாமை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

சட்டசபையில் எம்எல்ஏக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக இன்றும் நாளையும் புத்தாக்க பயிற்சி காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

சட்டசபையில் உறுப்பினர்கள் என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது போன்ற மரபுகளை அறிந்துகொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com