தமிழக செய்திகள்

தென் மாவட்ட பயணிகளுக்கு நற்செய்தி: சிறப்பு ரெயில் சேவைகள் நீட்டிப்பு

தூத்துக்குடியில் இருந்து வருகிற 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வே பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை தாம்பரம் மற்றும் எழும்பூருக்கு இயக்கப்பட்டு வரும் முக்கிய சிறப்பு ரெயில்களின் சேவைகளை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி நீட்டிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில்களின் முழு விவரங்கள் பின்வருமாறு:

நெல்லை – தாம்பரம் சிறப்பு ரெயில்கள்

நெல்லையில் இருந்து வருகிற 5-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06166) இயக்கப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து வருகிற 6-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை (திங்கட்கிழமை) நெல்லைக்கு சிறப்பு ரெயில் (06165) இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரெயில்கள்

தூத்துக்குடியில் இருந்து வருகிற 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை (திங்கட்கிழமை) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06018) இயக்கப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து வருகிற 7-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் (06017) இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில்கள்

எழும்பூரில் இருந்து வருகிற 10-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் (06045) இயக்கப்படுகிறது. அதே போல, கன்னியாகுமரியில் இருந்து வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரெயில் (06046) இயக்கப்படுகிறது.