ரெயில் 
தமிழக செய்திகள்

தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06126) இயக்கப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

56 சிறப்பு ரெயில்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை தெற்கு ரெயில்வே சார்பில் 56 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.

தாம்பரம்-திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06110) இயக்கப்படுகிறது.

அதே போல, தாம்பரத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06109) இயக்கப்படுகிறது.

மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06126) இயக்கப்படுகிறது.

அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) மங்களூரு சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.