தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (25-ந்தேதி) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06063), மறுநாள் காலை 10.55 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வருகிற 28-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (06064), மறுநாள் காலை 11 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.