தமிழக செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது

பாடகர் அறிவு தவெகவின் கொடிப்பாடலை பாடி உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

பாடகர் அறிவு (அறிவரசு கலைநேசன்) ஒரு இந்திய சொல்லிசை, பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாசுடர் (2021) படத்திற்காக இவர் எழுதிய "வாத்தி இரைடு" பாடலுக்காகவும், தீ உடன் இணைந்து இவர் பாடிய "எஞ்சாய் எஞ்சாமி" என்ற பாடலாலும் புகழ் பெற்றார். பாடகர் அறிவு தவெகவின் கொடிப்பாடலை பாடி உள்ளார்.