தமிழக செய்திகள்

91-வது பிறந்தநாள்: பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மரியாதை

தமிழக அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

அரசு விழாவாக கொண்டாட்டம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்

‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரசு சார்பில் மரியாதை

தமிழக அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவசிலைக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சப்-கலெக்டர் கவுதம், திருச்செந்தூர் தாசில்தார் தங்கசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT