

‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் திறக்கப்பட்டது.
மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவசிலைக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது சப்-கலெக்டர் கவுதம், திருச்செந்தூர் தாசில்தார் தங்கசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
த.வெ.க. சார்பில் நெல்லை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் காட்வின், ஜேக்கப், ஜீவகுமார், மாலதி, பிரான்சிஸ், செல்வராஜ், ராஜா, சுனில், மாரி நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் சரவணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீதபாண்டியன், திருச்செந்தூர் நகர செயலாளர் வாழ்சுடலை, நிர்வாகிகள் ஜெகதீஷ் விராயன், சுரேஷ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், இணை செயலாளர் சுரேஷ்பாபு, துணை செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டை மணிகண்டன், நகர செயலாளர் மகேந்திரன், பாசறை துணை செயலாளர் ராஜா, நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெங்கடாசலம், மகளிர் அணி செயலாளர் சுகிர்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் உடையார், மாநில தொழிற்சங்க தலைவர் சரவணகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி, நல்லாசிரியர் பன்னீர்செல்வம், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.