தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம்- விரைவில் கைதாகும் செந்தில் பாலாஜி?

சென்னை போலீசார் கரூரில் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளனர் என்றும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதற்கு எதிராக வாக்​களிக்க வேண்​டும் என்​று கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் ரூ.35 கோடி பேரம் பேசி உள்ளனர். இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகின்றனர். இதில், இதுவரை 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, செந்தில் பாலஜியை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது சென்னை போலீசார் கரூரில் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இதனால், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி விரைவில் கைதாகக்கூடும எனவும் கூறப்படுகிறது.