தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணையும் செம்மலை

அ.தி.மு.க.வில் நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, கட்சியின் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாராபுரத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்ட மேடைக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை திடீரென்று வந்தார் அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.

​

தொடர்ந்து, ஏற்கனவே அ.தி.மு.க.விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள், மேடைக்கு வந்த செம்மலையை ஆரத்தழுவி த.வெ.க.விற்கு வரவேற்பு அளித்தனர்.

அ.தி.மு.க.வில் நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, கட்சியின் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க. தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அவர் த.வெ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் மூத்த அரசியல்வாதியான செம்மலை பங்கேற்றிருப்பது கொங்கு மண்டல அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT