தமிழக செய்திகள்

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!

ஜூலை மாதம் கூட்டணி கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.

தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், விஜய், திருமாவளவன், காதர் மொய்தீன், வைகோ ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த இடதுசாரி கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இக்கூட்டணியில் இடம்பெறவில்லை.

முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என பெயரிடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT