தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - இடதுசாரிகள் புறக்கணிப்பு!

நாங்கள் எந்தக் கூட்டணியிலும் என இடதுசாரிகள் திட்டவட்டமாக தெரிவிப்பு.
தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - இடதுசாரிகள் புறக்கணிப்பு!
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (செப்.9) நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.

எனினும், இக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக கே. பாலகிருஷ்ணன் மற்றும் பெ. சண்முகம் ஆகியோர் உறுதிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கவில்லை என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆட்சி அமையக்கூடாது என்பதற்காகவே வெளியில் இருந்து ஆதரவு அளித்ததாகவும், அமைச்சரவையிலோ அல்லது அவர்களது கூட்டணியிலோ தாங்கள் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

முந்தைய கூட்டமும் புறக்கணிப்பு

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தவெக-வின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்தையும் இடதுசாரிகள் புறக்கணித்திருந்தனர்.

இதன் மூலம், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டணி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க போவதில்லை என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருப்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com