வீரட்டானேஸ்வரர் கோவிலை திவாகரன் வலம் வந்த காட்சி. 
தமிழக செய்திகள்

Sasikala| திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சசிகலாவின் அண்ணன் சாமி தரிசனம்- சசிகலா பெயரில் அர்ச்சனை

தேர்தல் நேரத்தில் அவரது வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாலை மலர்

பண்ருட்டி:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தோழி சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும் ,டி.டி.வி. தினகரனின் மாமாவுமானவர் வி.கே. திவாகரன்.

இவர் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு காரில் திடீரென வருகை தந்தார். அவரை கோவில் குருக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மூலவர் சாமி சன்னதியில் அவர் சசிகலா பெயரில் அர்ச்சனை செய்தார். பின்னர் அம்பாள் பெரிய நாயகி சன்னதிக்கு சென்று அங்கும் சசிகலா பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டார். இதனை தொடர்ந்து கோவிலை வலம் வந்து வராகி அம்மன் சன்னதியில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார். தேர்தல் நேரத்தில் அவரது வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.