TN Assembly Election| ஆவடி தொகுதியில் சசிகலா போட்டியிட விருப்ப மனு

சசிகலா ஆதரவாளர்கள் அவரது இல்லத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர் .
TN Assembly Election| ஆவடி தொகுதியில் சசிகலா போட்டியிட விருப்ப மனு
Published on

சென்னை:

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான கட்சியில் இணைந்துள்ள சசிகலா அந்த கட்சியின் பொதுச்செயலாளராகி உள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் அவரது இல்லத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர் .

ஆவடி தொகுதியில் சசிகலா போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து கட்சியினர் மனுக்களை வாங்கினார்கள். இதேபோன்று பூந்தமல்லி ,திருப்போரூர் உள்ளிட்ட சென்னையை சுற்றியுள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தும் மனுக்களை வாங்கினார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com