தமிழக செய்திகள்

#TNGovernor தமிழக கவர்னராக ஆர்.வி.ஆா்லேகர் 12-ந்தேதி பதவி ஏற்பு

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.

சென்னை:

தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள கவர்னர் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டாா்.

இதை தொடர்ந்து ஆா்.வி.ஆா்லேகா் நாளை மறுநாள்(புதன்கிழமை) சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் ஆா்.என்.ரவி, தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.

இதையடுத்து தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் 12-ந்தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறாா். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT